செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் 8 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, புதுக்கோட்டையில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை,
காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தமிழ் தேசிய கட்சியினர் புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் கூடினர். பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி அங்குள்ள செல்போன் கோபுரத்தில் கையில் கட்சி கொடியுடன் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி கோஷம் எழுப்பினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து நேற்று காலை 10.45 மணிக்கு செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்த தமிழ் தேசிய கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ரகுபதி, அய்யா, அண்ணா உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.