ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலைகள் அகற்றம்
ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தனியார் காற்றாலை அமைக்கும் பணிக்காக, ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலைகள், மின்கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
ஓட்டப்பிடாரம்,

ஆக்கிரமிப்பு சாலைகள்
ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த காற்றாலை அமைப்பதற்கு தேவையான உதிரி பாகங்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு வசதியாக, தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் ஓட்டப்பிடாரம் பெரியகுளம் செல்லும் பிரதான கால்வாயின் கரைகளை உடைத்து, அதன் மேல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதே போல் கீழமுடிமன், ஜம்புலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களுக்கு செல்லும் கால்வாய்களை மண் போட்டு மூடி, சாலை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
மேலும் அந்த காற்றாலை பணிகளுக்கு தேவையான மின்சாரம், கொண்டு வருவதற்காக, காற்றாலை நிறுவனங்கள் மக்கள் செல்லும் பாதையில் மின்கம்பங்களை அமைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தாசில்தார் எச்சரிக்கை
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயர், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞானசம்பந்தம் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தாசில்தார் நம்பிராயர் தலைமையில் மண்டல துணை தாசில்தார் இசக்கிராஜா, வருவாய் ஆய்வாளர்கள் அகஸ்டின் பாலா, ஸ்டாலின் ஆகியோர் அந்த பகுதிகளை பார்வையிட்டு, கால்வாய் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் பொதுமக்கள் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்களையும் அகற்றினர்.
இதுபோன்று பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் ஆக்கிரமிப்பு சாலை, மின்கம்பங்கள் அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் நம்பிராயர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.