பா.ம.க.வினர் கருப்புக்கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்பகோணத்தில் பா.ம.க.வினர் கருப்புக்கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-30 23:15 GMT
கும்பகோணம்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பா.ம.க.வினர் கருப்புக்கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து பேசினார்.

இதில் பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், இதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

மேலும் செய்திகள்