தஞ்சையில் ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி
தஞ்சையில் ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி;
தஞ்சாவூர்,
சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான எம்.நடராஜனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள தமிழ் அரசி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்து கொண்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ம.நடராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ம.நடராஜன் குறித்த மலர் தொகுப்பை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். இதனை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் வி.திவாகரன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நல்லகண்ணு பேசியதாவது: அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக ம.நடராஜனுடன் நான் நெருங்கி பழகியுள்ளேன். தமிழ்மொழிக்காக மாணவர் பருவத்திலேயே போராட்ட களத்தில் தன்னை அர்ப்பணித்தவர். தன்னை முன்னிலைப்படுத்தாதவர். கல்லணை, பெரியகோவிலுக்கு வரும் மக்கள், வரலாற்று நினைவு சின்னமாக திகழும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருவார்கள். அதை உருவாக்கிய ம.நடராஜனை நினைத்து பார்ப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன். சாதி, மத, அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவருடன் நட்பு பாராட்டி வந்தவர் ம.நடராஜன். அவர் எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர். பிறர் பதவியில் ஏறி அமர ஏணியாக திகழ்ந்தவர். விருப்பு, வெறுப்பு இன்றி கடமையை செய்து வாழ்ந்து மறைந்து விட்டார். தமிழ்மொழியை காக்க மாணவர்களை ஒருங்கிணைத்து தளபதியாக செயல்பட்டார். தமிழகத்தில் விடுதலை புலிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், அவர்களை யாரும் அறியாமல் மறைந்து வாழ்வதற்கும் உதவி செய்தவர்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைய எல்லா வகையிலும் தோள் கொடுத்து துணை நின்றார். நினைவு தூண் மட்டுமே அமைக்க நாங்கள் முடிவு செய்தோம். அதற்கு நிலம் கொடுத்து நினைவு முற்றமாக அமைய காரணமாக இருந்தார். அவர் நினைவு முற்றத்தின் காவலனாக திகழ்வார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. தமிழ் உணர்வாளர், பகுத்தறிவு கொண்டவர் ம.நடராஜன். பெரியார், அண்ணா ஆகியோரின் தத்துவத்தில் மாறாத கொள்கை படைத்தவர். எந்த பதவியையும் அவர் தேடி போகவில்லை. ஆனால் எல்லா பதவியையும் நிர்ணயம் செய்தவர். அரசியலில் விஞ்ஞானத்தை படைத்தவர். அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய திறமை அவரிடம் இருந்தது. தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தஞ்சையில் 2 நாட்கள் ம.நடராஜன் நடத்தினார். ஏணியாக இருந்து பலர் ஏற்றம் பெறவும், தோணியாக இருந்து பலர் கடல் கடக்கவும் உதவியாக இருந்தவர். ஈழத் தமிழர்களுக்காக பல நாடுகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினார். சசிகலாவின் தைரியம், தியாகங்கள் தெரியும். அதற்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்.
கவிஞர் வைரமுத்து. திராவிட இயக்க கிளைகள் பரந்து, விரிந்து இருக்கலாம். ஆனால் திராவிட இயக்க கிளைகளின் ஆணிவேரில் ம.நடராஜனும் ஒருவர். இந்தியை எதிர்த்து மாணவர்களை ஒருங்கிணைத்து போராடியவர். திராவிட இயக்கத்தை மறைக்கவும், சிந்தனைகளை அழிக்கவும், மொழி உணர்வை கிள்ளி எறியவும் ஏதோ ஒரு சக்தி எங்கிருந்து வந்தாலும் அதை முறியடிக்க திராவிட இயக்கங்கள் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா,ம.நடராஜன் நினைத்து இருந்தால் அரசியலில் பெரிய இடத்திற்கு சென்று இருக்க முடியும். சாணக்கியனாக திகழ்ந்த அவருக்கு சாணக்கியத்தனம் இல்லை. ஆனால் சசிகலாவுக்கு சாணக்கியத்தனம் இருக்கிறது. தமிழ் கலாசாரம், மொழியை அழிக்க ஒரு கூட்டம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. இனத்தையும், மொழியையும் அழித்தால் நிலத்தையும் அழித்து விடுவார்கள். அதை முறியடிக்க அனைவரும் ஒரே குரலாக எழுப்பி தமிழன் விழித்துவிட்டான் என்பதை வெளிக்காட்ட வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை பெரியகோவிலை பார்க்கும்போதெல்லாம் ராஜராஜசோழன் நினைவு வரும். அறிவியல் தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணையை பார்க்கும்போது கரிகால்சோழன் நினைவு வரும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பார்க்கும்போது ம.நடராஜன் நினைவு வரும். தமிழ்மொழி, இனத்தை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து மீட்டவர்கள் ம.நடராஜனும், சசிகலாவும் தான். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள், வீடியோக்கள் இருந்தும் அதை வெளியிட்டு தன் மீது கூறப்படும் பழியை சசிகலாவால் துடைத்திருக்க முடியும். ஆனால் ஜெயலலிதாவின் நன்மதிப்புக்காக அதை அவர் வெளியிடவில்லை. நம்பிக்கைக்கு பாத்திரமாக சசிகலா திகழ்ந்துள்ளார். சசிகலாவின் மனசோர்வுக்கு அருமருந்தாக தினகரனின் அரசியல் களம் அமையும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசும்போது, எனது சித்தி(சசிகலா) நன்றாக இருக்க வேண்டும் என்று பல தியாகங்களை செய்தவர் ம.நடராஜன். அவருக்கு உலகம் முழுவதும் பல நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் ம.நடராஜனின் சகோதரர் சுவாமிநாதன், கவிஞர் காசி ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் ரெங்கசாமி, தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி பன்னீர்செல்வம், கனடாவை சேர்ந்த மெர்லின், புலவர் கலியபெருமாள், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், கேப்டன் சக்கரபர்த்தி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். முடிவில் ம.பழனிவேலு நன்றி கூறினார்.
படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சசிகலா மற்றும் எம்.நடராஜனின் குடும்பத்தினர் செய்திருந்தனர்.