மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை,
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அய்யனார் கோவில்
குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில், கடந்த 21–ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 11 மணிக்கு உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். 6–ம் திருநாளான 26–ந்தேதி காலை 9 மணிக்கு கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பங்குனி உத்திரம்
10–ம் திருநாளான நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. மதியம் 2 மணிக்கு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி அய்யனாரை வழிபட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு உற்சவர் அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி மேல புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் உத்திரபாண்டியன், வீரசிங், இலக்குமண பாண்டியன், சேர்மத்துரை, அசோகராஜ், ஜெயக்குமார், அழகேசன், பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
ஏரல் அம்மன் கோவில்
ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதனையொட்டி காலையில் பால்குடம் எடுத்து வருதல், மதியம் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) மதியம் சிறப்பு பூஜையுடன் அன்னம் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்க்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.