தூத்துக்குடி மாநகராட்சியில், முதல் முறையாக நடப்பு ஆண்டில் உபரி பட்ஜெட் தாக்கல் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் முதல் முறையாக நடப்பு ஆண்டில்(2018–19) உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், கூடுதலாக ரூ.1¾ கோடி வருவாய் வரும் எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
உபரி பட்ஜெட்
தூத்துக்குடி மாநகராட்சியில் 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், மாநகராட்சிக்கு வருவாய் நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, கல்வி நிதி ஆகியவற்றில் மொத்தம் ரூ.5 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரம் உபரி வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், நடப்பு ஆண்டில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள், அரசு மானியம், அரசு சுழல் நிதி மூலம் ரூ.92 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரம் வருமானம் வரும். இதில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பராமரிப்பு, இயக்கம், சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.90 கோடியே 92 லட்சத்து 91 ஆயிரம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் உபரியாக ரூ.1 கோடியே 84 லட்சம் உபரியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் வருவாய்
குடிநீர் வரி மற்றும் பயன்பாட்டு கட்டணம் ரூ.55 கோடியே 51 லட்சத்து 25 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதில் குடிநீர் இயக்க செலவு, பழுதுபார்ப்பு, ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்காக மொத்தம் ரூ.52 கோடியே 63 லட்சத்து 62 ஆயிரம் செலவாகும். இதில் உபரியாக ரூ.2 கோடியே 87 லட்சத்து 63 ஆயிரம் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி வரி மற்றும் இதர வருமானம் ரூ.3 கோடியே 12 லட்சத்து 52 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.2 கோடியே 2 லட்சம் செலவினங்கள் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் உபரியாக ரூ.88 லட்சத்து 52 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநகராட்சியில் முதல் முறையாக உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.