தூத்துக்குடியில் நீர், மோர் பந்தல்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடியில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 6 இடங்களில் நீர், மோர் பந்தல்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 6 இடங்களில் நீர், மோர் பந்தல்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
நீர், மோர் பந்தல்கள்
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு, நகர அரசு பஸ் டெப்போ, பழைய மாநகராட்சி அலுவலகம், பாத்திமாநகர் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பாளையங்கோட்டை ரோடு ஆகிய 6 இடங்களில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் திறந்துவைத்தார்
விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நீர், மோர் பந்தல்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மேற்கு பகுதி செயலாளர் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், வக்கீல் ஆண்ட்ரூ மணி, தூத்துக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழக தலைவர் சுபான், துணை செயலாளர் சங்கர், வட்ட செயலாளர்கள் சாலமோன், ஜெய்கணேஷ், தேன்ராஜ், இளைஞர் அணி நட்டார்முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.