பள்ளிப்பட்டு அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பள்ளிப்பட்டு அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-29 21:50 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த தாங்கல் காலனியை சேர்ந்தவர் தனசாமி. அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராகவும், கர்லம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவருடைய மகன் தனசேகர்(வயது 31).

கடந்த 1-ந்தேதி மாயமான இவர், 10-ந்தேதி பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் காட்டுப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். விசாரணையில் செம்மரக்கடத்தல் தகராறில் தனசேகர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

மேலும் 3 பேர் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக குட்டி(37), மாணிக்கம் (46), ராஜேந்திரன் (28), மணி(37), கோபால் (60) ஆகிய 5 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி தெக்களூரை சேர்ந்த பெருமாள்(45), திருவண்ணாமலையை சேர்ந்த முரளி(45), சாமிநாதன்(45) ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுவரை இந்த கொலை வழக்கில் மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்