இந்த ஆண்டில் மட்டும் மராட்டிய முதல்–மந்திரி அலுவலகத்தில் ரூ.3.34 கோடி டீ செலவு காங்கிரஸ் குற்றச்சாட்டு
மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அலுவலகத்தில் இந்த ஆண்டில் மட்டும் ரூ.3 கோடியே 34 லட்சம் டீ செலவு ஆகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.;
மும்பை,
மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அலுவலகத்தில் இந்த ஆண்டில் மட்டும் ரூ.3 கோடியே 34 லட்சம் டீ செலவு ஆகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிக செலவு
மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அலுவலகத்தில் டீ மற்றும் நொறுக்குத்தீனி என்ற அடிப்படையில், நடப்பாண்டில் (2017–18) ரூ. 3 கோடியே 34 லட்சம் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செலவு கடந்த 2015–16–ம் நிதியாண்டில் ரூ.58 லட்சமாக இருந்தது.
ஆனால் நடப்பாண்டில் டீ செலவுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டு இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. தினமும் முதல்–மந்திரி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் டீ குடிப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
கோல்டன் டீயா?
கிரீன் டீ, லெமன் டீ என்பதையெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் முதல்–மந்திரி குடிப்பது எந்த வகை டீ?. அது என்ன கோல்டன் டீயா?
மாநிலம் முழுவதும் விவசாயிகள் செத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முதல்–மந்திரியின் அலுவலகத்தில் டீ செலவு இந்த அளவு உயர்ந்து இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.