அச்சரப்பாக்கம் அருகே வாகன சோதனையில் 2,688 மதுபாட்டில்கள் சிக்கின
அச்சரப்பாக்கம் அருகே வாகன சோதனையில் 2,688 மதுபாட்டில்கள் சிக்கியது.
அச்சரப்பாக்கம்,
அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக காரை ஓட்டி வந்த டிரைவர், போலீசை கண்டதும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
உடனே போலீசார் அங்கு சென்று காரை சோதனையிட்டனர். காரில் 2,688 மதுபாட்டில்கள் இருந்தன. அவை அனைத்தும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் காரில் இருந்த பதிவு எண் போலி என்பதும் தெரிந்தது. இதையடுத்து காரையும், மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.