தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
காங்கேயம் அருகே பெண் இறந்த விவகாரத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
காங்கேயம்,
காங்கேயம் அருகே உள்ள சண்முகம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி சரஸ்வதி (65). இவர்களுடைய மகள் தமிழ்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவருடன் சென்னிமலையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்து விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் சரஸ்வதியின் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்களை தீத்தாம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் ஆடு மேய்ந்துள்ளது. இதனால் சரஸ்வதிக்கும், சக்திவேலின் மனைவி தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக சக்திவேலின் குடும்பத்தினர் சண்முகம்பாளையத்தில் உள்ள ஊர் பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி, காங்கேயம் போலீசில் தேவி புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் சரஸ்வதி உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சரஸ்வதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் சென்னிமலையில் உள்ள தமிழ்செல்வி மற்றும் உறவினர்கள் காங்கேயம் சென்று, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வி ஒரு புகார் மனுகொடுத்தார். அதில் “ (எனது தாய்) சரஸ்வதி மீதான வழக்கை வாபஸ் வாங்க சக்திவேல் தரப்பினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டார் என்றும், எனவே தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் சரஸ்வதியை தற்கொலைக்கு தூண்டியதாக கவி என்கிற கண்ணுசாமி, சக்திவேல், தேவி, ஈஸ்வரமூர்த்தி, பிரேம்குமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் ஈஸ்வரமூர்த்தி (25) மற்றும் பிரேம்குமார் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.