பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் இன்னும் 3 நாளில் வெளியீடு எடியூரப்பா அறிவிப்பு
பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்னும் 3 நாளில் வெளியிடப்படும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்த வாக்குகள் வித்தியாசம்
நாங்கள் கடந்த 6 மாதங்களாக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம். தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்கள் மற்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இறுதியாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அப்சல்புரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாலிகையா குத்தேதார் பா.ஜனதாவில் சேருவது குறித்து அவசரகதியில் நான் எந்த தகவலையும் வெளியிடமாட்டேன். அவர் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இன்னும் பலர் எங்கள் கட்சிக்கு வருவார்கள். சித்தராமையா தலைமைக்கு எதிராக காங்கிரசில் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
பா.ஜனதாவில் சேருவார்கள்
தேர்தல் தேதி முடிவாகட்டும் என்று அவர்கள் காத்திருந்தனர். இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஒவ்வொருவராக எங்கள் கட்சிக்கு வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சந்தேஷ் நாகராஜ் எம்.எல்.சி. குடும்பத்தினர் நாளை (அதாவது இன்று) எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேருவார் கள். சாகர் தொகுதியில் யாருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆய்வு முடிவுகள் மற்றும் மாவட்ட குழு என்ன சிபாரிசு செய்கிறதோ அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். யாருக்கு டிக்கெட் கிடைத்தாலும் அனைவரும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இன்னும் 3 நாட்களில் பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.