பாணாவரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்
பாணாவரத்தில் நள்ளிரவில் மர்மநபர்கள் நடமாடுவதாகவும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் பலர் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு சுற்றித்திரிந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கம்,
பாணாவரம் திடீர்நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் சுற்றித்திரிந்தனர். அதேபோல், நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் மர்மநபர்கள் 2 பேர் நடமாடி உள்ளனர். நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து, மர்மநபர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். இருவரும், தப்பி ஓடி பாணாவரம் காட்டில் பதுங்கி விட்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பாணாவரம் பஜார் வீதியில் மீண்டும் மர்மநபர்கள் 2 பேர் நடமாடி உள்ளனர். அவர்களை கவனித்த பொதுமக்கள் விரைந்து வந்து இருவரையும் பிடித்து நீங்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்தனர். அதற்கு இருவரும் சரியாக பதில் அளிக்காமல், முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இருவரையும் அடிக்க பாய்ந்தனர். பிடிபட்ட இருவரில் ஒருவர், பாணாவரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 44) என்பவரின் கையை பிடித்துக் கடித்து விட்டார். மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 2 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி பாணாவரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் இருவரும் ஆந்திராவை சேர்ந்த பவண்குமார்ரெட்டி (34), வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுவேல் (31) என்றும் அதில், பவண்குமார்ரெட்டி தான், முருகனின் கையை பிடித்து கடித்தவர் எனத் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பாணாவரம் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், எங்கள் பகுதியில் ஒரு மாதமாக சங்கிலி பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் இருவரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
எனவே இதுபற்றி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ஒருசிலர் தரையில் அமர்ந்தும், மற்ற சிலர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பாணாவரம் பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் நடமாடுவதாகவும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷம் எழுப்பி, கூச்சலிட்டனர். இதனால், பாணாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களும், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கமும் சேர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் போலீசார், பொதுமக்களை அழைத்துக்கொண்டு பாணாவரம் பகுதிக்கு சென்றனர். இருவரும் எந்தெந்தப் பகுதியில் சுற்றித்திரிந்தார்கள் எனக் கேட்டு தெரிந்து கொண்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பொது மக்கள் விரட்டியதில் 2 பேர் தப்பி ஓடி, காட்டில் பதுங்கிய இடத்தையும் போலீசார் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் பாணாவரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த பவண்குமார்ரெட்டியும், பொன்னுவேலும் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் கையில் கடிபட்டு காயம் அடைந்த முருகனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, கட்டுப்போட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.