காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது சித்தராமையா பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.;
மைசூரு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
தனி விமானம் மூலம்...
முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மைசூருவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்தார். பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு அங்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளதே தவிர, உத்தரவிடவில்லை. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்குங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவில்லை. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒரு ‘ஸ்கீம்’-ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றுதான் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
நீங்கள்தான் பொறுப்பு
அதனால் யாரும் பயப்பட தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினேன். அந்த கூட்டத்தில் தேவேகவுடா, எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா, குமாரசாமி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மத்திய மந்திரிகளான அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி தெளிவாக கூறியிருக்கிறேன்.
மத்தியில் நீங்கள்தான் ஆட்சி செய்கிறீர்கள், அதனால் நீங்கள்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா மற்றும் அனந்தகுமாரிடம் கூறிவிட்டேன்.
5 முறை வெற்றி
என்னைப்பற்றி அவதூறாக பேசி வரும் குமாரசாமியைக் கேட்டு நான் அரசியல் செய்ய வேண்டியதில்லை. நடைபெற உள்ள தேர்தலில் நான் சாமுண்டீஸ்வரி தொகுதியிலேயே போட்டியிடுவேன். நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 தடவை வெற்றிபெற்று இருக்கிறேன். சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
என்னைப்பார்த்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான் சென்று ஆதரவு திரட்டிய இடங்களுக்கெல்லாம் அவரும் சென்று வருகிறார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று என்னைப்பற்றி அமித்ஷா அவதூறாக பேசி இருக்கிறார். முதலில் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா? அல்லது ஜெயின் சமுதாயத்தைச் சேர்ந்தவரா? என்பதை நிரூபிக்கட்டும். என் மீது குற்றச்சாட்டுகளை கூறும் அவர், அதை நிரூபிக்க வேண்டும். ஆனால் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்தது மக்களுக்கே தெரியும்.
சுற்றுப்பயணம்
நான் 4 நாட்கள் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தொகுதி மக்களை சந்திக்க இருக்கிறேன். ஒருநாள் ஓய்வு எடுக்க உள்ளேன். அதற்காக நான் பந்திப்பூரில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். என்னுடன் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வருவார்கள்.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
தொகுதி மக்கள் மகிழ்ச்சி
இதையடுத்து அவர் காரில் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு சென்றார். அங்கு திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் ரம்மனஹள்ளி, மாதேவபுரா, அன்சியா உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். சித்தராமையாவின் இந்த திடீர் சுற்றுப்பயணத்தால் சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெண்கள் ஆரத்தி எடுத்து சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில கிராமங்களில் மேள, தாளங்களுடன் சித்தராமையாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சித்தராமையாவை பார்ப்பதற்காக சாலைகளில் இருபுறமும் கிராம மக்கள் குவிந்திருந்தனர். சித்தராமையாவின் வருகையையொட்டி மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.