தேன்கனிக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது: பேட்டராய சாமி கோவில் தேரோட்டம்
தேன்கனிக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற பேட்டராய சாமி கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் 3 மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சவுந்தரவல்லி சமேத பேட்டராய சாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்த கோவிலில் தேர்த்திருவிழா பங்குனி மாதம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், கருட வாகன உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கஜேந்திர மோட்சம், ராமபானம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி முதலில் சவுந்தரவல்லி தாயார் தேர் இழுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பேட்டராய சாமி சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் சாமிகளுக்கு தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கதிரவன், ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா, தேன்கனிக்கோட்டை தாசில்தார் மணிமொழி, முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கி ராமரெட்டி, பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஜெயராமன், காண்டிராக்டர் பழனிசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராமன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
3 மாநில பக்தர்கள் பங்கேற்பு
அப்போது பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தவாறு “கோவிந்தா, கோவிந்தா” என பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அந்த நேரம் பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நடக்க வேண்டி வாழைப்பழத்தில் தவன இலை, அருகம்புல் ஆகியவற்றை சுற்றி தேரின் மீது வீசினர். மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தேரின் மீது தானியங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
விழாவை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், பானகம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த விழாவில் தேன்கனிக்கோட்டை, சுற்று வட்டார கிராம பக்தர்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த தேர்த்திருவிழாவையொட்டி தேன்கனிக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது.