11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-03-29 22:30 GMT
கோவை,

கோவையை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும், இருகூரை சேர்ந்த சதாம் உசேன் (வயது 20) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள், ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். பல இடங்களில் ஒன்றாக சுற்றியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த வாலிபர் அந்த மாணவியிடம் நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி கடந்த 26-8-2017 முதல் 14-2-2018 வரை அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இதை அறிந்த சதாம் உசேன் அந்த மாணவியிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொண்டார்.

இதற்கிடையே, அந்த மாணவி கர்ப்பமான விஷயம் அவருடைய பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர் கள் இது குறித்து கோவை மாநகர கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சதாம் உசேன் திருமண ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதாம் உசேன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோ வை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்