டாக்டர், நர்சு இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஆண் குழந்தை பெற்ற பெண்
டாக்டர், நர்சு இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலேயே பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொரப்பூர்,
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கொங்கரபட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தீபா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை கம்பைநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் அந்த ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி கிடந்தது. இதைப் பார்த்து தீபாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் தீபாவிற்கு பிரசவ வலி அதிகமானது. பின்னர் சிறிது நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
முற்றுகை போராட்டம்
இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தாயும், குழந்தையும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே காலை 8 மணியளவில் கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதற்காக நர்சு ஒருவர் வந்தார். அப்போது அங்கு வந்த தீபாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர், ஒரு நர்சு மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் இங்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்கு கூடுதல் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும் என்றனர்.
பரபரப்பு
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரேவதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவானந்தம் மற்றும் அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் மலர்விழியும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.