த.மா.கா. வளர்ச்சிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
த.மா.கா. வளர்ச்சிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
செம்பனார்கோவில்,
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் த.மா.கா. கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் வட்டார தலைவர்கள் கலியமூர்த்தி, சார்லஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம கமிட்டி தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.
விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, புதிய கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
த.மா.கா.வின் நோக்கமே வளமான தமிழகத்தை உருவாக்குவதே ஆகும். மேலும் ஊழல் ஒழிப்பு, எளிமை, நேர்மை உள்ளிட்ட கொள்கைகளை கொண்ட இயக்கமாக த.மா.கா. விளங்குகிறது. அதேபோல் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதேயை ஒரே நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறது. த.மா.கா. வளர்ச்சிக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கார்த்திக், விவசாய அணி செயலாளர் பாரி, மீனவர் அணி செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம கமிட்டி பொறுப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.