டி.டி.வி. தினகரன் அணியினரின் வேட்பு மனு நிராகரிப்பு: கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம்
டி.டி.வி. தினகரன் அணியினரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கோவில் எசனை கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் தேவைப்படும் 11 இயக்குனர்களுக்கு ஆளும் அ.தி.மு.க. சார்பில் 11 பேரும், டி.டி.வி. தினகரன் அணி சார்பில் 11 பேரும் கடந்த 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனு கடந்த 27-ந்தேதி பரிசீலனை நடைபெற்றது. இதில் எந்த மனுவும் நிராகரிப்பு இல்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அ.தி.மு.க.வை சேர்ந்த 11 பேரின் மனுவை மட்டும் தேர்வு செய்து இயக்குனர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் 11 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று முன்தினம் இரவு ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் தலைமையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கோவில் எசனையில் பரபரப்பு ஏற்பட்டது.