கனிமொழி எம்.பி. நாளை நெல்லை வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நாளை நெல்லை வருகிறார்.
நெல்லை,

இதுகுறித்து நெல்லை மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் (கிழக்கு), சிவபத்மநாபன் (மேற்கு), அப்துல்வகாப் (மத்திய) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கனிமொழி எம்.பி. நெல்லை வருகை
தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி நாளை (சனிக்கிழமை), நாளை மாறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானம் நிலையம் வருகிறார். அங்கு இருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.
அவருக்கு பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் காலை 10 மணிக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர் நெல்லை வண்ணார்பேட்டை அப்னா ஓட்டலில் நடைபெறும் நெல்லை கிழக்கு, மேற்கு, மத்திய, மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கனிமொழி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுரண்டையில் 2 உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விளக்கை மாலை 6 மணி நடைபெறும் விழாவில் கனிமொழி எம்.பி. இயக்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், இரவு 7 மணிக்கு தென்காசியில் அமைக்கப்பட்டு உள்ள 2 உயர் மின்கோபுர விளக்கை இயக்கி வைக்கிறார்.
தென்காசியில் பொதுக்கூட்டம்
அன்று இரவு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் ஏற்பாட்டில் மறைந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரத்னவேல் பாண்டியன் படத்திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பெரியசாமிபுரத்தில் கனிமொழி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாய கூடம் கட்டப்பட்டு உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் நலக்கூடத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் ஆயாள்பட்டியில் உள்ள சென்னையில் தற்கொலை செய்து கொண்ட கார் டிரைவர் மணிகண்டன் வீட்டுக்கு சென்று, அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறுகிறார்.
மாலை 4 மணிக்கு ராதாபுரம் ஒன்றிய ஆனைகுடியில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பெட்டைகுளத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.