குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ஆண்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உறைகிணறுகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர ஆழ்துளை கிணற்று நீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி மூலம் வினியோகம் செய்யும் குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.
மேலும் நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுதாகவும், குடிநீர் ஆபரேட்டர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு முனியாண்டி கோவில் தெரு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 13-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி-மதுரை சாலைக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆண்டிப்பட்டி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.