நிதி நிறுவன அதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது
சின்னமனூரில் நிலம் விற்பனை செய்ததில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். நிதி நிறுவனத்தின் பங்குதாரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
தேனி,
சின்னமனூர் நகராட்சி 10-வது வார்டு சுருளிநாடார் தெருவை சேர்ந்த பேயத்தேவர் மகன் பாண்டியன். இவரும், சின்னமனூர் வடக்கு ரதவீதியை சேர்ந்த திருப்பதி மகன் இளங்கோவன் என்பவரும் பங்குதாரர்களாக தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (வயது 53) என்பவருடைய 7½ சென்ட் நிலத்துக் கான விற்பனை உரிமத்தை இளங்கோவன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அந்த நிலத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக பாண்டியனிடம் இளங்கோவன் கூறியுள்ளார். அதை நம்பிய பாண்டியன் தனது மனைவி விஜயா பெயரில் அந்த நிலத்தை வாங்கினார். பின்னர் சின்னமனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை கிரையம் முடித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த நிலம் வேறு ஒரு பெண்ணுக்கு சொந்தமானது என்று அந்த பெண் கோர்ட்டில் தீர்ப்பு பெற்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இளங்கோவனிடம் கேட்ட போது தகராறு செய்து பாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வில்லங்கம் இல்லாத சொத்து என்று கூறி தன்னை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்து ரூ.9 லட்சம் மோசடி செய்து விட்டதாக இளங்கோவன், தங்கவேல் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாண்டியன் புகார் செய்தார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், தங்கவேலை போலீசார் கைது செய்தனர். இளங்கோவனை தேடி வருகின்றனர்.