பள்ளி புத்தகங்களில் பண்பாட்டு கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் அரசுக்கு, காந்திய இயக்கம் கோரிக்கை

பள்ளி புத்தகங்களில் பண்பாட்டு கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அகில இந்திய காந்திய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-03-29 20:45 GMT
நெல்லை,

பள்ளி புத்தகங்களில் பண்பாட்டு கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அகில இந்திய காந்திய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சரிடம் மனு

அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் செங்கோட்டை விவேகானந்தன், பொதுச்செயலாளர் பாதமுத்து, இளைஞர் அணி செயலாளர் திருமாறன் ஆகியோர் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் ஆகியோரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பண்பாடு கல்வி

கல்வித்திட்டத்தில் நல்ல மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசு விரும்புவதை நாங்கள் பாராட்டுகிறோம். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளி புத்தகங்களில் பண்பாட்டு கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இளம் சிறார்கள் குற்றச்செயல் வெகுவாக குறையும், பாலியல் குற்றம் குறையும். இளைஞர்கள் மத்தியில் மது மற்றும் போதை பழக்கங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. தேசபக்தி அதிகரிக்கும்.

இளம்வயதில் அறியாமல் செய்யும் கொள்ளை, கொலை போன்ற வன்முறை சம்பவங்கள் குறையும். ஒழுக்கம், நேர்மை, முதியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு உயரும். பஸ், ரெயில், அரசு கட்டிடங்கள் மக்கள் சொத்து என்ற உணர்வு ஏற்படும். அவற்றை மாணவர்கள் சேதப்படுத்த மாட்டார்கள். எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு பண்பாட்டு கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்