சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் இலவச வைபை வசதி அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
சங்கரன்கோவிலில் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச வைபை வசதியை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச வைபை வசதியை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
இலவச வைபை வசதி
இந்தியாவிலேயே முதன்முறையாக டிஜிட்டல் அட்வெர்டைசிங் தொழில் நுட்பத்துடன் கூடிய இலவச வைபை வசதி தொடக்க நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி, வைபை வசதியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த இலவச வைபை வசதியை ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்த இயலும். 8 மெகா பைட்ஸ் வேகத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1 மணி நேரம் இலவசம். 600 மீட்டர் சுற்றளவுக்கு இந்த சேவை கிடைக்கும். இந்த சேவையின்போது தமிழக அரசின் விளம்பரங்கள், விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படும். மேலும் தமிழக அரசின் இணையதளங்களும், மொபைல் அப்ளிகேசன்களும் இலவசமாக 24 மணி நேரமும் கிடைக்கும். தொடர்ந்து மாவட்டத்தில் முன்மாதிரி நகரமாக, சங்கரன்கோவில் நகர் முழுவதும் இந்த இலவச வைபை வசதியானது விரிவுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அங்கன்வாடி-வகுப்பறை கட்டிடம் திறப்பு
பின்னர் சங்கரன்கோவில் நகரில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து காயிதே மில்லத் தெருவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம், காவேரி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
பின்னர் சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல் பட்டதாரி படிப்பை முடித்த பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 42 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சமும், பட்டயப்படிப்பு முடித்த பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 73 பேருக்கு 18 லட்சத்து 25 ஆயிரமும், 115 பெண்களுக்கு தாலிக்கு தலா 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, தாசில்தார் ராஜேந்திரன், முன்னாள் நகரசபை துணை தலைவர் கண்ணன், நகர செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.