நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,

பாதம் கழுவுதல்
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழும் நிகழ்ச்சிகளையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த காலத்தின் இறுதி கட்டமாக நேற்று பெரிய வியாழன் திருச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலை நற்கருணை ஆராதனையும், இறுதியாக முதியோரின் பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் முதியோரின் பாதங்களை அருட்தந்தையர் கழுவினர். இதில் ஆலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர் ஜூடு மெரில், சேவியர், அருட்தந்தை எரிக் ஜோ உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமான பங்கு இறை மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புனித வெள்ளி
இன்று (வெள்ளிக்கிழமை) ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை தெற்கு பஜாரில் சிலுவை பாதை திருநிகழ்வுகள் நடைபெறுகின்றன. நாளை 31-ந் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 11 மணிக்கு ஏசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.