தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் குழந்தைகளுடன் போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியிலும் நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்து உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு வருகிறது.
ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று 46-வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
குழந்தைகளுடன்...
இந்த போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர். அந்த பகுதியில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாதபடி மாசுபடிந்து உள்ளதால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதுவும் ஒரு குடம் ரூ.10-க்கு வாங்கி சமையல் செய்தனர்.
மூலைக்கரைப்பட்டியில்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நெல்லை மாவட்டத்துக்கும் பரவியது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் ஊர் பொதுமக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாகுல்அமீது தலைமை தாங்கினார். இசக்கிமுத்து, பார்வதி, மாசிலாமணி, குமார், மாடசாமி ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மஜித், மாரிபாண்டி, பீட்டர், மகேஷ், இக்பால், காதர்மைதீன் மற்றும் ஊர் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடத்த வருமாறு வாட்ஸ்-அப்பில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே மூலைக்கரைப்பட்டியில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.