பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-03-28 23:11 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் வனஜா (வயது 53). இவர் நேற்று முன்தினம் தனது பேரன் தினேஷை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல்நல்லாத்தூர் காலனியை சேர்ந்த பவுன்ராஜ், அஜித்குமார், மணிபாரதி ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வனஜாவை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் வனஜாவின் பேரன் தினேஷை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து வனஜா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் பவுன்ராஜ், அஜித்குமார், மணிபாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்