பால்வள முனைவோர் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.5 கோடி தரவேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை

பால்வள முனைவோர் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அரசு செயலாளரிடம் அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்தார்.

Update: 2018-03-28 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெல்லி சென்றுள்ள அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் தருண் ஸ்ரீதரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் கால்நடை துறை சம்பந்தமான திட்டங்களை புதுச்சேரியில் செயல்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மத்திய அரசின் திட்டங்களான பால்வள முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் பால்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் போன்றவற்றுக்கு புதுச்சேரி மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கி தருமாறு வேண்டுகோள் விடுத்தார். முதல்கட்டமாக பால்வள முனைவோர் மேம்பாட்டு திட்டத்துக்கு உடனடியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு வலி யுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய பால்வளத்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர், இது குறித்து விரிவான திட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி யுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்