திலாசுப்பேட்டை வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
திலாசுப்பேட்டை வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை திலாசுப்பேட்டை கருணஜோதி நகரை சேர்ந்தவர் ஜாக்கி என்ற சரவணன் (வயது 19). இவர் கடந்த 23-ந் தேதி காந்திநகர் வழுதாவூர் சாலையில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் காமராஜர் நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஜோசுவா (21), சாந்தகுமார் (19), உதயராஜ், மணி ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ஜோசுவா, சாந்தகுமார் ஆகிய 2 பேர் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள உதயராஜ், மணி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.