உடுமலை அரசு கல்லூரியில் ஊழியர்கள், பேராசிரியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

உடுமலை அரசு கல்லூரியில் ஊழியர்கள், பேராசிரியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தி ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-03-28 22:13 GMT
உடுமலை,

உடுமலை அரசு கலைக்கல்லூரியின் ஊழியர்களையும், பேராசிரியர்களையும் நிதியாளர் அவமதிப்பதாகவும், அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கடந்த 26-ந்தேதி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

நேற்று முன்தினம் 2-வது நாள் போராட்டத்தின் போது, கல்லூரி கல்விதுறை கோவை மண்டல இணை இயக்குனர் கலா உடுமலை அரசு கல்லூரிக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்லூரி வளாகத்தில் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிட்டனர். அத்துடன், சங்கு ஊதியும், மணி அடித்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். நேற்று கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்கலைக்கழக செய்முறை தேர்வு நடந்தது.

இந்த தேர்வு முடிந்த பிறகு கல்லூரிபேராசிரியர்கள், போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

மேலும் செய்திகள்