ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பிடிபட்டனர்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2018-03-28 22:15 GMT
மும்பை,

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பிடிபட்டனர்.

லஞ்சம்

மும்பை காந்திவிலி மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவர் அறிவியல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நிறுவனத்திற்கு மாநகராட்சி யின் லைசன்ஸ் பிரிவு சீனியர் ஆய்வாளர் சந்தீப் மாருதி மோரே (வயது53), ஆய்வாளர் நியாஷ் அகமது காஷி (45) ஆகியோர் வந்து ஆய்வு செய்து உள்ளனர்.

அப்போது அந்நிறுவனத் திடம் குறிப்பிட்ட துறைகளின் தடையில்லா சான்று இல்லை என கூறி, நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ள தாக தெரிவித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டாமெனில் தங்களுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர்.

2 பேர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் அவர்கள் கொடுத்த யோசனையின் பேரில் சம்பவத்தன்று அவர் மாநகராட்சி அலுவலகத் துக்கு சென்று அதிகாரிகள் இருவரையும் சந்தித்து முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக கூறி கொடுத்தார்.

லஞ்ச பணத்தை ஆய்வாளர் நியாஷ் அகமது காஷி வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் சீனியர் ஆய்வாளர் சந்தீப் மாருதி மோரேவும் கைதானார்.

மேலும் செய்திகள்