ஆர்.எம்.எஸ். அலுவலகத்தை மூடுவதை கண்டித்து அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையங்களில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகங்களை மூடுவதை கண்டித்து கடலூரில் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையங்களில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகங்களை தபால் துறை மூட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கண்டித்தும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், கடலூர் முதுநகரில் இருந்து திருச்சி செல்லும் ரெயிலை திருப்பாதிரிப்புலியூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் நிஜாமுதீன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்.எம்.எஸ். அலுவலர் சங்க திருச்சி கோட்ட துணை பொதுச்செயலாளர் குணசேகரன், கிளை செயலாளர் ரவி, வர்த்தக சங்க தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தை பொதுச்செயலாளர் மருதவாணன் முடித்து வைத்து பேசினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொருளாளர் சுகுமாறன், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், நுகர்வோர் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்.எம்.எஸ். அலுவலகத்தை மூடும் முடிவை தபால் துறை கைவிடாவிட்டால் கடலூர் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று பொதுச்செயலாளர் மருதவாணன் தெரிவித்தார்.