கர்நாடகத்தில் கோடையில் மின்வெட்டு இருக்காது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடகத்தில் கோடையில் மின்வெட்டு இருக்காது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கோடையில் மின்வெட்டு இருக்காது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
துணை மின்நிலையங்கள்
நான் மின்சாரத்துறை மந்திரியாக பதவி ஏற்றபோது கர்நாடகத்தின் மின் உற்பத்தி 14 ஆயிரத்து 30 மெகாவாட்டாக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 616 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஆதாரங்கள் மூலம் புதிதாக 10 ஆயிரத்து 586 மெகாவாட் மின் உற்பத்தி செய்து இருக்கிறோம்.
உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவை துமகூருவில் அமைத்துள்ளோம். புதிதாக 145 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. 315 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன. டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறையை போக்க 188 இடங்களில் டிரான்ஸ்பார்மர் வங்கிகளை அமைத்துள்ளோம்.
புதிய ஆராய்ச்சிகள்
142 டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறையின் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. மின்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாவகடாவை போல் ரோனாவில் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்கா அமைக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடக அரசு கொள்முதல் செய்யாது.
கர்நாடகத்திற்கு தேவைப்பட்டால் அங்கிருந்து மின்சாரம் பெறப்படும். அதே போல் பெலகாவியில் நீர்மின்சாரம், காற்றாலை மின்சாரம் மற்றும் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சம் விவசாய பம்புசெட்டுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
மின்வெட்டு இருக்காது
விவசாய பம்புசெட்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் செலுத்தினால் மின் இணைப்பு வழங்கும் நடைமுறையை நாங்கள் அறிமுகம் செய்தோம். மின்துறையில் நாங்கள் புதிதாக 21 ஆயிரம் பேரை நியமனம் செய்துள்ளோம். மின்துறையில் நாங்கள் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளோம். இந்த திட்டங்கள் அனைத்தும் மாநில அரசின் செலவில் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை.
தேவையான அளவுக்கு மின்சாரம் உற்பத்தி ஆகிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் இரவு கர்நாடகத்தின் மின் தேவை 10 ஆயிரத்து 777 மெகாவாட்டாக இருந்தது. அந்த மின்சாரத்தை நாங்கள் விநியோகம் செய்தோம். இன்னும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டாலும் அதையும் விநியோகம் செய்ய அரசு தயாராக உள்ளது. அதனால் வரும் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.