அ.தி.மு.க. பேனர்களை அகற்றக்கோரி மதுரையில் டிராபிக் ராமசாமி போராட்டம்
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார். இதைதொடர்ந்து பேனர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
மதுரை,
மதுரை ரிங்ரோட்டில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி, மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சரை வரவேற்றும், நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பேனர்கள் மதுரை கே.கே.நகர் மேலமடை சிக்னலிலும் வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டுக்கு வந்தார். அந்த வழியாக அவர் சென்றபோது, சாலையில் சிக்னலின் அருகே முதல்-அமைச்சரை வாழ்த்தியும், வரவேற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டார். உடனே அவற்றை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார்.
அவர் அங்குள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை செல்போனில் படம் பிடித்து, காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பினார். இதைதொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த 3 பேனர்களை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரனை வரவேற்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.