திருப்பத்தூர் அருகே லாரி-கார் மோதல்; வியாபாரி பலி
திருப்பத்தூர் அருகே லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் சென்ற மர வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர்,
காரைக்குடியைச் சேர்ந்தவர் செழியன்(வயது 48). இவர் மர வியாபாரம் செய்துவந்தார். செழியன் கடந்த 26-ந்தேதி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன்(40), கண்ணன்(44) ஆகியோருடன் வியாபாரம் தொடர்பாக கோவைக்கு சென்றுள்ளார். வியாபாரம் முடிந்து அங்கிருந்து அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு காரைக்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார். காரின் முன்பகுதியில் செழியனும், பின்பகுதியில் கண்ணனும் அமர்ந்திருந்தனர். திருப்பத்தூர் அருகில் சிங்கம்புணரி சாலையில் அவர்கள் வந்தபோது, திருப்பத்தூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு விறகுகள் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று எதிரே வந்தது. அப்போது காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் கார் உருக்குலைந்து அதில் வந்த செழியன் உள்பட 3 பேரும் காரின் இடிபாடுகளுடன் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக சென்ற திருப்பத்தூரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் காரின் கதவுகளை உடைத்து 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மர வியாபாரி செழியன் இறந்துபோனார்.
கண்ணன் மற்றும் முருகன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டிச் சென்ற தேவகோட்டையைச் சேர்ந்த சத்தியராஜ்(44) என்பவரை கைது செய்தனர்.