கூட்டுறவு சங்க தேர்தலில் அ.ம.மு.க.வினர் வேட்புமனு தாக்கலை தடுக்க கூடாது, மாவட்ட செயலாளர்கள் அதிகாரிகளிடம் முறையீடு
கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது தங்கள் தரப்பினர் மனு தாக்கல் செய்வதை தடுக்க கூடாது என அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
விருதுநகர்,
கூட்டுறவு தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. இந்த நிலையில் சில இடங்களில் மனு தாக்கலின் போது பிரச்சினை எழுந்தது. அ.தி.மு.க. வினருக்கும் தினகரனின் அ.ம.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அ.ம.மு.க. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத்தமிழன், மேற்கு மாவட்ட செயலாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் நிர்வாகிகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் ஆகியோரை சந்தித்தனர். கூட்டுறவு சங்க தேர்தலில் தங்கள் தரப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தடுக்கப்படுகிறார்கள் என்றும், தங்கள் தரப்பினர் போட்டியிடுவதற்கு ஆளுங்கட்சி தரப்பில் முட்டுக்கட்டை போடப்படும் நிலை உள்ளதால் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டதாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர்.