காவிரி மேலாண்மை வாரியம் இன்று அமைக்கப்படுமா? மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ‘கெடு‘ இன்று முடிய உள்ள நிலையில், மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25-ந் தேதி சேலம்-சென்னை விமான சேவையை தொடங்கி வைத்தார். மறுநாள்(26-ந் தேதி) கோவையில் 86 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததுடன், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பாலம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேற்று முன்தினம் சொந்த தொகுதியான எடப்பாடியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தொடங்கி வைத்தார். அன்று இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று காலை 11 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் ‘கெடு‘ நாளை(அதாவது இன்று) முடிகிறது. எனவே, 6 வார காலம் முடிந்த பின்னர்தான் எதையும் சொல்ல முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா? என மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னரே(இன்று) மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதே வேளையில் நிச்சயம் நல்லதொரு முடிவை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு. எனவே, அதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தும் என்றே எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.