அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் வெற்றி பெறுவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி
அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் வெற்றி பெறுவோம் என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம்கோர்ட்டில் குக்கர் சின்னத்துக்கு தடை விதிக்கவில்லை. இதை முக்கிய வழக்காக எடுத்து கொண்டு அமர்வு அமைத்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம்கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு இரட்டை இலையை தோற்கடித்தோம். அடுத்த 3 வாரங்களுக்குள் எங்களது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க இருந்தது. இந்த பயம் காரணமாக அவர்கள் கோர்ட்டை நாடியுள்ளனர்.
நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்ற வழக்கை 3 வாரத்துக்குள் முடிக்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது நல்ல விஷயம். இந்த வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.வின் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் அண்ணா படம் இருக்கிறது. எங்களது கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் அம்மா படம் இருக்கிறது. இந்த வித்தியாசம் மக்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கொடி, கட்சி போன்றவை அவர்களிடம்(எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்) தானே இருக்கிறது. பின்னர் எதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியை பார்த்து பயப்பட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது. பா.ஜனதாவுக்கு பஜனை கோஷ்டியைவிட அதிகமாக அ.தி.மு.க.வினர் தாளம் போடுகிறார்கள். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசவே இல்லை.
காவிரி பிரச்சினையில் ஏற்கனவே தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். யார் பூனை? யார் யானை? என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி தெரிவித்து இருக்கும். நாங்கள் பூனை என்றால் எங்களை பார்த்து எதற்காக பயப்பட வேண்டும்.