கோவில்பட்டியில் ரூ.7 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கோவில்பட்டியில் ரூ.7 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.

Update: 2018-03-28 21:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ரூ.7 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.

நான்கு வழிச்சாலை

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து லாயல் மில் மேம்பாலம் வரையிலும் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் ரூ.7 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நேற்று மாலையில் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூமி பூஜை செய்து, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக டிஜிட்டல் விளம்பரப்படுத்துதல் தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

குடிநீர் தொட்டி


பின்னர் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம்- திட்டங்குளம் இடையே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் பூமி பூஜை செய்து, தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கோவில்பட்டியை அடுத்த முடுக்குமீண்டான்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3½ லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு, மின் மோட்டார் அறையுடன் கூடிய குடிநீர் தொட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டி அருகே பெரியசாமிபுரம், அகிலாண்டபுரத்தில் கால்நடை மருந்தகங்கள் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கலந்து கொண்டவர்கள்


விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் ஆன்ட்ரூஸ், ராஜபாண்டி, கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அருணாசலம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்