கூடலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலி, மயக்க ஊசி செலுத்தி மீட்பு
கூடலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி தவித்தது. இதனால் வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி அதனை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
கூடலூர்,
கூடலூர், நடுவட்டம் பகுதியில் அடர்ந்த வனங்கள் உள்ளன. இது காட்டு யானைகள், சிறுத்தைப் புலிகள், மான்கள், காட்டெருமைகள், புலிகள், கரடிகள் என வனவிலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்த நிலையில் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் வனப்பகுதியில் சிறுத்தைப்புலியின் உறுமல் சத்தம் நேற்று முன்தினம் மாலையில் கேட்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் வனச்சரகர் ராமச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது சுமார் 3 வயது பெண் சிறுத்தைப்புலி சுருக்கு கம்பியில் சிக்கி தவித்து கொண்டிருந்தது. மேலும் வனத்துறையினரை கண்டதும் ஆக்ரோஷம் அடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அதன் அருகே செல்லவில்லை.
பின்னர் கோவை மாவட்ட வனத்துறையின் கால்நடை டாக்டர் மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் இரவு 9 மணிக்கு கால்நடை டாக்டர் மனோகரன் விரைந்து வந்து சுருக்கு கம்பியில் சிக்கி இருந்த சிறுத்தைப்புலியை மீட்பது குறித்து வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சிறுத்தைப்புலியின் கழுத்தில் கிடந்த இரும்பு கம்பியை அகற்றுவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் சிறுத்தைப்புலி வனத்துறையினரை நோக்கி பாய தொடங்கியது. ஆனால் கழுத்தில் சுருக்கு கம்பி இருந்ததால் வனத்துறையினரின் அருகே சிறுத்தைப்புலியால் வர முடியவில்லை. இதை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தைப்புலியின் கழுத்தில் கிடந்த கம்பியை அறுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து கால்நடை டாக்டர் மனோகரன் சிறுத்தைப்புலியின் உடலில் மயக்க ஊசியை செலுத்தினார். சிறிது நேரத்தில் அது மயக்கம் அடைந்தது.
பின்னர் சிறுத்தைப்புலியின் முகத்தை வனத்துறையினர் துணியால் போர்த்தி மறைத்தனர். தொடர்ந்து சுருக்கு கம்பியை வனத்துறையினர் அறுத்து அகற்றினர். பின்னர் இரவு 10½ மணிக்கு கம்பிகள் அகற்றப்பட்டது. மேலும் வனத்துறையினரும் அங்கிருந்து புறப்பட்டு சற்று தூரம் தள்ளி வந்து கண்காணித்தனர்.
மயக்க நிலையில் கிடந்த சிறுத்தைப்புலிக்கு இரவு 11 மணிக்கு நினைவு திரும்பியது. பின்னர் அங்கிருந்து வேகமாக சென்றது. அதன்பின்னரே வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.