ராட்சத இரும்பு பெட்டியை ஏற்றி சென்ற டிரெய்லர் லாரி விபத்தில் சிக்கியது டிரைவர் பலி
திருச்சி பாய்லர்ஆலையில் இருந்து ராட்சத இரும்புபெட்டியை ஏற்றி சென்ற டிரெய்லர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் டிரைவர் பலியானார். கிளனர் படுகாயம் அடைந்தார்.
அரியமங்கலம்,
திருச்சி பாய்லர் ஆலையில் இருந்து என்ஜினீயரிங் பணிக்காக பயன்படுத்தக்கூடிய இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிய டிரெய்லர் லாரி ஒன்று சென்னை துறைமுகத்துக்கு புறப்பட்டது. அங்கிருந்து அந்த இரும்பு உதிரி பாகங்கள் கப்பல் மூலம் வங்காள தேசத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
இந்தநிலையில் நேற்று மாலை பாய்லர்ஆலையில் இருந்து புறப்பட்ட லாரி, திருச்சி-தஞ்சை சாலையில் சென்று கொண்டு இருந்தது. டிரெய்லர் லாரியின் பின்புறம் 30 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பெட்டி வைக்கப்பட்டு, இரும்பு கம்பியால் கட்டப்பட்டு இருந்தது. டிரெய்லர் லாரியை திருச்சி மாவட்டம் துறையூர் கீராம்பூரை சேர்ந்த டிரைவர் மணி ஓட்டி சென்றார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த பாரதிராஜா(வயது 27) கிளனராக உடன் இருந்தார்.
திருச்சி அரியமங்கலம் மேம்பாலம் அருகே மாலை 5.50 மணி அளவில் அந்த டிரெய்லர் லாரி சென்றபோது, லாரியின் முன்னால் கார் ஒன்று திடீரென சென்றது. அப்போது காரின் மீது மோதி விடாமல் இருக்க டிரைவர் மணி திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் லாரியின் பின்புறம் இருந்த ராட்சத இரும்பு பெட்டி நகர்ந்து லாரி டிரைவர் அமர்ந்து இருந்த முன்பகுதியில் மோதி இடித்து தள்ளியது. 30 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பெட்டி இடித்து நசுக்கியதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் லாரி டிரைவர் மணி, கிளனர் பாரதிராஜா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் லாரியின் அருகே ஓடி சென்று பார்த்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களை மீட்க முடியவில்லை. உடனே இது பற்றி அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திகணேசன், மயில்வாகனன் மற்றும் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அங்கு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையே நடுரோட்டில் டிரெய்லர் லாரி விபத்துக்குள்ளாகி நின்றதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த வாகனங்கள் அரியமங்கலம் மேம்பாலம் வழியாக செல்ல முடியவில்லை. இதனால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உடனே போலீசார் சில வாகனங்களை அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் இருந்து பொன்மலை வழியாக திருப்பி விட்டனர். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு மேலும் 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு டிரெய்லர் லாரியில் இருந்த ராட்சத இரும்பு பெட்டியை தூக்கி கீழே இறக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 30 டன் எடையுள்ள அந்த இரும்புபெட்டியை தூக்குவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டது. பின்னர் இரும்பு சங்கிலிகளால் கட்டி ராட்சத கிரேன் உதவியுடன் பலமணிநேரம் போராடி இரும்புபெட்டியை தூக்கி சாலையின் ஓரத்தில் வைத்தனர். அங்கு அப்பளம்போல் நொறுங்கி கிடந்த லாரியின் முன்பகுதியையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இரவு 8.45 மணி அளவில் அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லாரி டிரைவர் மணி சிகிச்சை பலனின்றி இறந்தார். கிளனர் பாரதிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.