ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே, நேற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2018-03-28 20:45 GMT
ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே, நேற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையம்


ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் விஜயாசன பெருமாள் கோவில் முன்பு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. தூத்துக்குடி உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா தலைமை தாங்கி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

உதவி கலெக்டர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரங்கசாமி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்வமணி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முத்து எழில், வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒரு மூட்டை நெல் (70 கிலோ) ரூ.1,660-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் ஸ்ரீவைகுண்டம் சலவைத்துறை பகுதியில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமதளப்படுத்தும் பணி நடந்தது.

மேலும் செய்திகள்