கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பிய போலீசார் பொதுமக்கள் பாராட்டு

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-03-28 20:30 GMT
செங்கோட்டை,

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரி

தமிழக- கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு வகையான சரக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை போலீஸ் சோதனை சாவடி வழியாக எர்ணாகுளம் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு கன்டெய்னர் லாரி வந்தது. அதனை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதில், மீன் கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த லாரியை தமிழகத்துக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த லாரியை கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் கொண்டு போய் ஒப்படைத்தனர். அப்போது இந்த லாரியை தமிழகத்துக்குள் அனுமதிக்க கூடாது எனவும் தகவல் தெரிவித்து வந்தனர்.

பொதுமக்கள் பாராட்டு


ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இதே போன்று மீன் கழிவுகள் ஏற்றி வந்த ஒரு லாரியை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்தநிலையில், மீண்டும் நேற்று காலை மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை போலீசார் கேரளாவுக்கு திருப்பி அனுப்பியதால், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்