போலீசாரை கண்டித்து செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை போராட்டம்
ஜெகதாப்பட்டினம் போலீசாரை கண்டித்து, செல்போன் கோபுரம் மீது ஏறிய வாலிபர் தற்கொலை போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், மஞ்சக்குடி பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 35). இவர் மஞ்சக்குடி பகுதியில் நேற்று முன்தினம் சிலருடன் சேர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ஜெகதாப்பட்டினம் போலீசார் ரோந்து வந்தனர். இதனைக்கண்ட மோகன் உள்பட சிலர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அந்த இடத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மோகன் நேற்று முன்தினம் இரவு ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தனது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். இதற்கு போலீசார் மோகனிடம் ரூ.5 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி திரும்பி வந்து விட்டார்.
மோட்டார் சைக்கிளை போலீசார் எடுத்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட மோகன் நேற்று காலை 7 மணிக்கு ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்த ஒரு செல்போன் கோபுரம் மீது ஏறினார். உச்சிக்கு சென்ற அவர் அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.
இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. மேலும் மோகனிடம் மோட்டார் சைக்கிளை போலீசாரிடம் இருந்து வாங்கி தருவதாக பொதுமக்கள் கூறினர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர் இது குறித்து ஜெகதாப்பட்டினம் போலீசாருக்கும், தீயணைப்பு படைவீரர்களுக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
செல்போன் கோபுரம் அருகே போலீசார் சென்று மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 3½ மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை 10.30 மணிக்கு பொதுமக்கள் உதவியுடன், தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி மோகனை பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தனர்.
கீழே வந்ததும் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் அவரை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் மோகனின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதோடு, அதை திருப்பி கொடுக்க பணம் கேட்ட போலீசாரை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் ஜெகதாப்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மோகனின் மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.