நவிமும்பையில் சிறுமி கடத்தி கற்பழிப்பு ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததால் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நவிமும்பையில் ஆட்டோ டிரைவரால் கடத்தி கற்பழிக்கப்பட்ட சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தாள்;

Update: 2018-03-27 22:57 GMT
மும்பை,

நவிமும்பையில் ஆட்டோ டிரைவரால் கடத்தி கற்பழிக்கப்பட்ட சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தாள். அவரை கற்பழித்த டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காயத்துடன் கிடந்த சிறுமி

நவிமும்பை மகாபே பகுதியில் உள்ள சாலையில் சம்பவத்தன்று இரவு 16 வயது சிறுமி சாலையில் படுகாயங்களுடன் கிடந்தாள். அவர் விபத்தில் சிக்கியதாக கருதி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தகவல் அறிந்து வந்த போலீசார் அவளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு- சிறுமி நவிமும்பை திகா பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறாள். அவள் மகாபே எம்.ஐ.டி.சி.யில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள். சம்பவத்திற்கு முந்தைய நாள் வேலை முடிந்து ஒரு ஆட்டோவில் ஏறி வீடு வந்தாள். சம்பவத்தன்றும் அதே ஆட்டோ டிரைவர் அவள் வேலை முடிந்து வெளியே வரும் போது, அவளுக்காக காந்திருந்தார்.

கற்பழிப்பு

அவர் சிறுமியிடம் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறினார். அதன்பேரில் சிறுமி அவரது ஆட்டோவில் ஏறினார். இந்த நிலையில், சிறுமியை வீட்டுக்கு கொண்டு செல்லாமல் ஆட்டோ டிரைவர் அவளை அங்குள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று மிரட்டி கற்பழித்து உள்ளார்.

பின்னர் அவளை வீட்டில் விட்டு விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றார். தன்னை அவர் வேறு எங்கேயோ கடத்தி செல்வதை உணர்ந்த சிறுமி தப்பிக்க எண்ணி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தாள். இதன் காரணமாக அவள் காயம் அடைந்து சாலையில் கிடந்தது தெரியவந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த நிலையில், சிறுமி அந்த ஆட்டோவின் பதிவெண்ணை போலீசாரிடம் தெரிவித்தாள். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் சோலாப்பூரை சேர்ந்தவர் என்பதும், திகாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். ஆனால் அவர் தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்