அரியலூர்-பெரம்பலூர் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2018-03-27 22:45 GMT
அரியலூர்,

தஞ்சையில் மாநகராட்சி ஆணையரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய தேசியவாத காங் கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாநகராட்சி ஆணையர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதேபோல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தஞ்சை மாநகராட்சி ஆணையர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்