வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது

வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-03-27 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.புதூர் அருவங்காட்டூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இங்கு ஆட்டையாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தற்காலிகமாக அப்பள கடை நடத்தினார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி தமிழரசன் (வயது 40), மற்றும் அவருடைய நண்பர்கள் வந்தனர்.

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேசன் உள்ளிட்ட கடை வியாபாரிகளிடம் ரூ.5 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். இது தொடர்பாக மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்

இதைத்தொடர்ந்து தமிழரன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று தமிழரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள தமிழரசனிடம் போலீசார் வழங்கினர். 

மேலும் செய்திகள்