தந்தை, மகனுக்கு கத்திக்குத்து அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே தந்தை, மகனை கத்தியால் குத்தியது தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் நாகராஜ் (28) என்பவருக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ், இவரது தம்பி நவீன்குமார் (21), உறவினர் வெங்கடாசலம் (29) ஆகிய 3 பேரும், சீனிவாசன் வீட்டு முன்பாக வந்து அவரிடம் தகராறு செய்தனர்.
3 பேர் கைது
அப்போது தகராறு முற்றியதில் 3 பேரும் சேர்ந்து சீனிவாசன், அவரது மகன் மணிகண்டன் (25) ஆகியோரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த புகாரின்பேரில், பேளுக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து நாகராஜ், நவீன்குமார், வெங்காசலம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். அவர்களிடமிருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.