காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை எடப்பாடி பழனிசாமி பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை ஆகும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
சேலம்,
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று பகல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பெண்களிடம் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சில வார்டுகளுக்கு சென்று ஆய்வு செய்த பின்னர், டாக்டர்களிடம் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 29-ந் தேதி இறுதி நாள். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதே?
பதில்: ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியின் காரணமாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை சட்டபோராட்டத்தின் மூலமாக மத்திய அரசிதழில் வெளியிட செய்தார்கள். இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்ததன் தொடர்ச்சியாக, தமிழகமும் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. இன்னும் நாட்கள் இருக்கிறது. நிச்சயம் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: இப்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார்களா?
பதில்: அந்த நிலைப்பாடு எல்லாம் கடந்து வந்து விட்டது. ஏற்கனவே கடிதம் எழுதினோம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இது சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனவே, இந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆகவே, மத்திய அரசை வலியுறுத்தி, தொடர்ந்து எங்களுடைய எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலே குரல் கொடுத்திருக்கிறார்கள். நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முடக்கப்பட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு நமது எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இன்றைக்கு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்து இருப்பது குறித்து?
பதில்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்த ஆட்சியில் வந்ததாக நீங்கள் கருதக் கூடாது. ஏற்கனவே அது இயங்கி கொண்டிருக்கிறது. இப்போது அதை விரிவுபடுத்த வேண்டும் என்று முற்பட்டிருக்கிறார்கள், அதனால் அங்கிருக்கிற மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். அதை அரசு உரிய முறையில் பரிசீலிக்கும். இது நீதிமன்றத்திற்கு எல்லாம் போய் வழக்குகள் நடைபெற்றிருக்கிறது. அதை எல்லாம் பார்த்து தான் ஒரு முடிவு காண வேண்டும்.
கேள்வி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் தொடர்ந்து 44 நாட்களாக போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்களே?
பதில்: நீதிமன்றத்திற்கு போய், நீதிமன்றத்திலே என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது என்று ஆராய்ந்த பிறகு தான் இதுக்கு ஒரு முடிவு சொல்ல முடியும்.
கேள்வி: தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்திருக்கிறதே?
பதில்: நியூட்ரினோ திட்டம் எல்லாம் இப்போது வந்த திட்டம் அல்ல. அது எல்லாம் ஏற்கனவே நீண்டகாலமாக திட்டம் தீட்டப்பட்டு, நடைமுறைப்படுத்துகின்ற காரணத்தினாலே வேண்டுமென்றே திட்டமிட்டு சிலபேர் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான், இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் புதிதாக நாங்கள் கொண்டு வரவில்லை. நிருபர்களும், ஊடக நண்பர்களும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலே எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக இடையூறு செய்ய வேண்டும் என்று தேடி தேடி கண்டுபிடித்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறதே ஒழிய வேறொன்றும் கிடையாது. ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த திட்டத்தை கொண்டு வந்த மாதிரியும், நாங்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படுவது மாதிரியும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, எங்களை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு பாதிப்பில்லாத அரசாக ஜெயலலிதா அரசு செயல்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.