பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது வெள்ளி பொருட்கள்- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
காரைக்காலில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் நேற்று காரைக்கால் பாரதியார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விக்னேஷ் (வயது 26), தஞ்சாவூரை சேர்ந்த முனியாண்டி மகன் வினோத் (24) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் (27), கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஒரு மாத காலமாக காரைக்கால் மாவட்டத்தில் தங்கி, பூட்டி கிடக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், வினோத் மற்றும் கும்ப கோணத்தை சேர்ந்த மற்றொரு விக் னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை-வெள்ளி பொருட் கள், டி.வி. ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமேசை போலீசார் தேடி வருகிறார்கள்.